ஒட்டாவா - கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ பிரபல செல்வந்தருக்கு சொந்தமான பஹாமாஸ் சொகுசு மாளிகையில் விடுமுறையை கழித்ததாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக அவரிடம் அந்நாட்டு நீதிநெறி குழு விசாரணை நடத்தியது.
ஊடகங்களில் செய்தி:
அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பஹாமாஸ் தீவுக்கு சமீபத்தில் சுற்றுலா சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ கனடா நாட்டின் பிரபல செல்வந்தரான அகா கான் என்பவருக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாகவும், அவருக்கு சொந்தமாக பெல் தீவில் உள்ள சுமார் 350 ஏக்கர் பரப்பளவிலான சொகுசு மாளிகையில் தங்கியிருந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது.
பிரதமர் விளக்கம்:
இதற்கு விளக்கம் அளித்த ஜஸ்டின் டுருடோ, தனது மூதாதையர் காலத்தில் இருந்தே பிரபல தொழிலதிபரான அகா கானும், அவரது உறவினர்களும் தங்களது குடும்ப நண்பர்களாக பழகி வந்ததாகவும், ஒரு நண்பரின் விருந்தாளியாக சுற்றுலா செல்வதில் தவறு ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். தனது தந்தையும் கனடா நாட்டின் முன்னாள் பிரதமருமான பியேர் எல்லியாட் டுருடோவின் மரணத்தின்போது நடைபெற்ற இறுதி சடங்கில் அகா கான் முன்னிலை வகித்ததையும் ஜஸ்டின் டுருடோ சுட்டிக்காட்டி இருந்தார்.
கமிட்டி விசாரணை:
எனினும், இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என கனடா நாட்டு அரசின் நீதிநெறி கமிட்டி அறிவித்திருந்தது. இந்நிலையில், நீதிநெறி கமிட்டியின் விசாரணைக்கு நேற்று முன்தினம் நேரில் ஆஜரான ஜஸ்டின் டுருடோ, அக்கமிட்டியின் தலைவர் மேரி டாசனிடம் இதுதொடர்பாக விளக்கம் அளித்தார். இந்த விசாரணையில் நீதிநெறி முறைகளை மீறி ஜஸ்டின் டுருடோ நடந்து கொண்டதாக தெரியவந்தால் அவருக்கு ஒரு சிறிய தொகை அபராதமாக விதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.
English summary:
Canada's premier luxury villa in the Bahamas owned by wealthy celebrity Justin turuto Complaints regarding the holiday spent posed to him by the ethics committee conducted an investigation.