காந்திநகர்: குஜராத் மாநிலம் ஆமதாபாத், மும்பை இடையே அதிவிரைவு புல்லட் ரயில் திட்டத்திற்ககான ரூபாய் 77,000 கோடி ஒப்பந்தம் அம்மாநிலத்திற்கும் ரயில்வே அமைச்சகத்திற்கும் இடையே காந்திநகரில் நடந்த மாநாட்டில் கையெழுத்தானது. காந்தி மந்திரில் நடந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் விஜய் ரூபானி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் கலந்து கொண்டனர்
1.10 லட்சம் கோடி:
1.1 லட்சம் செலவு பிடிக்கும் இத்திட்டத்திற்கு 70 சதவீத பணமான 77,000 கோடியை மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் மாநில அரசுக்கும் அதிவேக ரயில் கார்ப்பரேஷனுக்கும் இடையே நேற்று கையெழுத்தானது.
மணிக்கு 350 கி.மீ., வேகம்:
குஜராத் மாநிலம் ஆமதாபாத்திற்கும் மும்பைக்கும் இடையே இந்த அதிவிரைவு புல்லட் ரயில் ஓட இருக்கிறது. இரு நகரங்களுக்கும் இடையேயான 508 கி.மீ., தூரத்தை இரண்டு மணி நேரத்தில் கடந்து விடும்.
திரில் பயணம்:
அகமதாபாத் - மும்பை இடையே அமைய உள்ள இந்த ரயில் தடம் 21 கி.மீ., நீளத்திற்கு கடலுக்கு அடியில் அமைக்கப்பட உள்ளது. நாட்டிலேயே முதன் முதலாக கடலுக்கு அடியில் திரில் பயணத்தை மக்கள் ரசிக்க உள்ளனர்.
இத்திட்டம் வரும் 2023ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிய சர்வதேச கார்ப்பரேஷனின் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
English summary:
Gandhinagar: Gujarat, Ahmedabad, Mumbai and Rs 77,000 crore deal between These states superfast bullet train between the Ministry of Railways was signed at a conference in Gandhinagar. Gandhi Mandir Chief Minister Vijay rupani in the contract program and was attended by Deputy Chief Minister Nitin Patel