சென்னை: உள்ளாட்சி அமைப்பை நிர்வகித்து வரும் தனி அதிகாரிகளின் பதவி காலம் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் கடந்த அக்.,24 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அவர்கள் பதவி காலம் முடிவதற்குள் தேர்தல் நடத்தி புதிய உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தேர்தல் ரத்து:
அதற்காக, அக்.,17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றபடவில்லை என கூறி சென்னை ஐகோர்ட் தேர்தலை ரத்து செய்தது. மேலும், டிச.,31 ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
பதவி காலம் நீட்டிப்பு:
இதற்கிடையே, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதற்காக தனி அதிகாரிகளை நியமினம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அவர்களின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத காரணத்தால் தனி அதிகாரிகளின் பதவி காலம் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
English summary:
Chennai: Local system managed by separate authorities extended his term until June.
By the end of his term, they held elections to elect new local representatives to the Election Commission.