சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மெரினா கடற்கரையில் 2-வது நாளான இன்றும் செல்போன் வெளிச்சத்தில் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்தது.
2-வது நாளாக செல்போன் வெளிச்சத்தில்:...
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெ ரிவித்தும் ,பீட்டாவிற்கு தடை விதிக்க வலியுறுத்தியும் பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மெரினாவில் இளைஞர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 2-வது நாளாக நீடித்து வருகிறது. முதல் நாளன்று இரவில் நடைபெற்ற போராட்டத்தின் போது மின்சாரம் தடைபட்டது. அப்போது தங்களின் செல்போனில் உள்ள டார்ச் மூலம் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இன்றும் மெரினாவில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இருள் கவிழ்ந்த பிறகும் இளைஞர்கள் தங்களின் செல்போன் வெளிச்சத்தில் போராட்டத்தை தொடர்கின்றனர். முன்னதாக முதல்வரின் அறிக்கை குறித்து காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இளைஞர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த அவர்கள் ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
English Summary:
Chennai: Marina Beach Jallikattu the 2nd day today in support of the youth continued to struggle in the light of a cell phone.