புதுடில்லி : முதல்வர்கள் குழு அளித்த பரிந்துரை, ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மாற மக்களை கட்டாயப்படுத்துகிறது என மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டினார்.
பரிந்துரை:
வங்கிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால், வரி விதிக்க வேண்டும் என்பது உட்பட, மத்திய அரசுக்கு முதல்வர்கள் குழு, பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. இப்பரிந்துரை கண்டனத்துக்குரியது என மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
கண்டனம்:
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது: வங்கிகளில் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்யும்போது பான் கார்டு எண் அளிக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தால் அதிக வரி விதிக்க வேண்டும் என்ற முதல்வர்கள் குழு அளித்த பரிந்துரை கண்டிக்கத்தக்கது. இதன்மூலம், ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைக்கு மாற, மக்கள் அதிக கட்டணத்தை செலுத்த கட்டாயப்படுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English summary:
NEW DELHI: The first group's recommendation, the CPI-M General Secretary Sitaram Yechury rokkamarra transaction is forcing people to switch to the accused.