
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: கடந்த ஆண்டு, இந்தியாவிற்கு சிறந்த ஆண்டாக இருந்தது. உலகில் அதிவேகமாக பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா விளங்கியது. இனி வரும் ஆண்டிலும், இது தொடரும் என உறுதியாக கூறுகிறேன். பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வட்டி விகிதமும் குறைய துவங்கியுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் மறு சுழற்சி வருவது என்பது சுமூகமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டில் ஜி.எஸ்.டி., மசோதா அமல்படுத்தப்படும். டிஜிட்டல் பொருளாதாரம் இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும். கறுப்பு பணம் உள்ளிட்ட ஏராளமான பணம் வங்கிக்கு திரும்பியுள்ளது. இதனால், வங்கிகள் கடன் வழங்கும் திறன் அதிகரித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு பொது மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
NEW DELHI: digital economy, India's Finance Minister Arun Jaitley has said that the future will be.