புதுடில்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில்குமார் தாவே கூறினார்.
நம்பிக்கை:
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில்மாதவ் தாவே கூறியதாவது: தமிழக அரசின் அவசர சட்டம் உள்துறை அமைச்சகத்திற்கு இன்று கிடைத்தது. சுற்றுச்சூழல், சட்டத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. மிகவிரைவாக பரிசீலனை முடித்து நல்ல முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் அமைதியாக நடக்கும் போராட்டம் பாராட்டத்தக்கது. ஜல்லிக்கட்டுக்கு மிகவிரைவாக நல்ல முடிவு எடுக்கப்படும். இன்று அல்லது நாளைக்குள் பிரச்னை முடிவுக்கு வரும் என நம்புகிறேன். தமிழக மக்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
நிரந்தர தீர்வு:
ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உறுதியாக, எவ்வித பிரச்னையின்றி ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும். அவசர கதியில் முடிவுகளை எடுத்து தவறான செயலில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழர்களின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என விரும்புகிறோம்.
தகவல் இல்லை:
பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஜல்லிக்கட்டு என்பதை ஏற்கிறோம். தமிழக பாரம்பரியத்தை காக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த முடிவு அறிவிக்கப்படும். அவசர சட்டத்திற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததாக எனக்கு தகவல் இல்லை. உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது என்பது மட்டுமே எனக்கு தெரிந்த தகவல். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
NEW DELHI: In the case of jallikattu get the good news to the people as soon as possible, said Federal Environment Minister Anilkumar Dave