புதுடில்லி : வாபஸ் பெறப்பட்ட ரூ.500, 1000 நோட்டுக்கள் வங்கிகளில் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்ட துளைத்து வருகின்றன.
பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை டெபாசிட் செய்வதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்து விட்டது. இந்நிலையில், இதுவரை மொத்தம் எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. இதுவரை டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் குறித்து மதிப்பீடு நடந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ், திரும்ப பெறப்பட்டதில் எவ்வளவு பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசோ ரிசர்வ் வங்கியோ
தெரிவிக்கவில்லை. தோராயமாக ரூ.15.44 லட்சம் கோடியை தாண்டி விட்டதாக கூறுகிறார்கள் என தெரிவித்துள்ளார். மா.கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், ‛‛அப்படியானால் கறுப்பு பணம் அனைத்தும் வெள்ளையாக்கப்பட்டு விட்டதா,'' என கேட்டுள்ளார்.
English summary:
NEW DELHI: withdrawn Rs 500, 1,000 bills have been deposited in the banks as much as the federal government asked the opposition parties have been gunshots.