கறுப்பு பண முதலைகளுக்கு ஆதரவு கொடுத்த, பெட்ரோல் 'பங்க்' உரிமையாளர்கள் குறித்த பட்டியலை, ஆயில் நிறுவனங்கள், வங்கிகளிடம் இருந்து பெற்றுள்ள வருமான வரித்துறை, விதிமீறிய, 1,000 'பங்க்'குகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தால், உரிமையாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.
மத்திய அரசு, நவ., 8ல், புழக்கத்தில் இருந்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தது. மக்கள் நலன் கருதி, பெட்ரோல், 'பங்க்'குகளில், அந்த நோட்டுகள் பெறப்பட்டன. செல்லாத நோட்டுகளை பெற வழங்கப்பட்ட அனுமதியை, பங்க் உரிமையாளர்கள், தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பங்க்குகள், நவ., 8க்கு பின், தினசரி விற்பனை செய்த விபரம், வங்கிகளில் செலுத்திய பணம், ஆயில் நிறுவனங்களுக்கு வழங்கிய பணம் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவை தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதில், தமிழகம் முழுவதுமுள்ள, 4,500 பங்க்குகளில், 1,000 பங்க்குகளில் விற்கப்பட்ட பெட்ரோல், டீசல், ஆயில் ஆகியவற்றின் மதிப்பு தொகையை விட, கூடுதலாக வங்கிக்கணக்கில் செலுத்தியது, தெரிய வந்தது. அந்த பங்க் உரிமையாளர்களின் பட்டியலை, வருமான வரித்துறை தயார் செய்துள்ளது. விரைவில், அவர்களது வீடு, அலுவலகங்களில், சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: செல்லாத நோட்டுகளை வாங்க, பங்க் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியை, அவர்கள் தவறாக பயன்படுத்தியதாக, ஆயில் நிறுவனங்கள், வங்கிகள் சார்பில், புகார்கள் குவிந்தன. அது குறித்து, தற்போது விசாரணை நடக்கிறது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், பங்க்குகளில் நடந்த விற்பனை, வங்கிகளில் செலுத்திய பணத்தைவிட, 10 - 20 சதவீதம் கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளது.
வங்கி கணக்கில் பணம் செலுத்தியவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், விற்பனை அதிகரிக்காமல், வங்கி கணக்கில் மட்டும், பணத்தை அதிக அளவில் செலுத்திய உரிமையாளர்களுக்கு, கிடுக்கிப்பிடி போடப்பட்டது. அதில், 1,000 பங்க் உரிமையாளர்கள் சிக்கினர். அவர்களிடம், விரைவில் விசாரணை நடக்க உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
English Summary:
Black money and backing for crocodiles, petrol 'punk' on the list of owners, oil companies, the banks received from the Income Tax Department, breach, 1,000 notices sent the owners were panic.