புதுடில்லி: இந்திய திருநாட்டின் 68 வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி ராஜ்பாத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து அவர் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார் . மழை காரணமாக இந்த விழா தாமதமாக துவங்கியது.
சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் :
குதிரைப்படை வீரர்கள் அணிவகுக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைத்து வரப்பட்டார். அவரது காரில் சிறப்பு விருந்தினர் அபுதாபி இளவரசர் முகமது பின் ஜியாத்தும் வந்தார். விழா மேடைக்கு வந்த இருவரையும் முப்படை தளபதிகள் , பிரதமர் மோடி வரவேற்றனர். இதனையடுத்து ராஜ்பாத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியேற்றி வைத்தார் .பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் உயிரிழந்த அசாமை சேர்ந்த ராணுவ வீரர் ஹேங்பன் தாதாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. விருதை ராணுவ வீரரின் மனைவி பெற்றுக்கொண்டார்.
முப்படை வீரர்கள் அணிவகுப்பு :
இதனை தொடர்ந்து முப்படை வீரர்கள் அணிவகுப்பு நடந்தது . இந்த அணிவகுப்பில் யு.ஏ.இ.,ன் 179 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். படை அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி பிரணாப், அபுதாபி இளவரசர், பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் எழுந்து நின்று ஏற்று கொண்டனர் . தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு, ஆயுதங்கள் அணிவகுப்பு நடைபெற்றன.
English summary:
New Delhi, contemporary India's 68th Republic Day is celebrated throughout the country with festivity. President Pranab Mukherjee, in New Delhi, National flag Rajpath. He took the soldiers to the Guard of Honour. The ceremony started late due to rain.