மதுரை : தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி அலங்காநல்லூரில் 21 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்து, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
வாடிவாசல் முன்பு போராட்டம்
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று (திங்கள்கிழமை) காலை 7 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மதுரை சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரண்ட இளைஞர்கள் வாடிவாசல் முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர், ஊர்வலமாக சென்றனர். கடுங்குளிரின் நடுவிலும் விடிய விடிய நடந்த அவர்களின் போராட்டத்திற்கு, உள்ளூர் மக்களும் ஆதரவு தந்து கலந்து கொண்டனர்.
போராட்டக்காரர்கள் கைது:
இந்நிலையில் இன்று காலை போராட்டக்காரர்களிடம் 10 நிமிடத்தில் கலைந்து செல்லுமாறு போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை இழுத்து செல்வதற்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட போதும், ‛பீட்டா'வுக்கு எதிராக கோஷமிட்டபடியே போலீஸ் வேனில் ஏறினர்.
அனுமதி அளிக்கப்பட்ட பின்னரும் போராட்டம் நடத்தியதால் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக தெரிவித்த போலீசார், கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்தனர். முடிவதாக 21 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்து போராட்டம் கைதில் முடிந்தது.
English Summary:
Madurai : Tamil traditional sport of the demanding gravel Alanganallur who ran the youth in the struggle for more than 21 hours, police arrested and forcibly removed.