சென்னை : தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில், அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தங்களின் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கொட்டும் மழையில் போராட்டம் :
புதுச்சேரி மட்டுமின்றி மதுரை, கோவை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரவிலும், இன்று அதிகாலையிலும் மழை கொட்டி வருகிறது. ஆனால், மாணவர்கள் உற்சாகம் கொஞ்சமும் குறையாமல் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சென்னை மெரினாவில் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் பங்கேற்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அலங்காநல்லூரில் 6 வது நாளாகவும், சென்னை மெரினா, மதுரை தமுக்கத்தில் 5வது நாளாகவும், மற்ற பகுதிகளில் 4வது நாளாகவும் மாணவர்களும், பொது மக்களும் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதுவரை கொட்டும் பனி மற்றும் வெயிலில் நடந்த போராட்டம், இன்று கொட்டும் மழையிலும் நடந்து வருகிறது.
ஆடிப்பாடி போராட்டம் :
அதிகாலையில் மழை கொட்டிய நிலையில், மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் ஒன்றிணைந்து சாலையில் ஆடிப்பாடி உற்சாகமாக போராட்டத்தை தொடர்ந்தனர். இதே போன்று பல பகுதிகளிலும் போராட்ட களத்தில் இருப்பவர்களை உற்சாகப்படுத்துவதற்காக தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளாக பறை உள்ளிட்டவைகளை முழங்கச் செய்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமைதிப் போராட்டம் :
அலங்காநல்லூரில் 6வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. நேற்று வரை கோஷங்களுடன் போராட்டம் நடந்து வந்த நிலையில், இன்று மவுன போராட்டம் நடத்தப்படுவதாக போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். சென்னையில் வணிகர்கள் பலர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் சில பகுதிகளில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
English summary:
Chennai: With the coming of the rains in many parts of the state, followed by the complete indifference of the students are conducting their struggle in favor of Jallikattu.