தஞ்சாவூர்: புதுச்சேரி, கடலுார், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அடாத மழையிலும் விடாது நடைபெற்று வருகிறது.
பெருகும் ஆதரவு:
சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததன் காரணமாக ஜல்லிக்கட்டு இந்தாண்டு நடைபெறவில்லை. இதனையடுத்து, களமிறங்கிய இளைஞர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், இதற்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
மழையிலும் தொடரும் போராட்டம்:
தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடலூர், தஞ்சை-பட்டுக்கோட்டை, கோபிசெட்டிபாளையம், அறந்தாங்கி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மழைக்கு அசராத இளைஞர்கள் கூட்டம் தொடர்ந்து அறவழியில் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர்.
English Summary:
Thanjavur: Pondicherry, Cuddalore, Erode jallikattu held at venues including the ongoing struggle of the youth to render undue exposure is taking place.