சென்னை : ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டில்லியில் இன்று காலை அறிவித்தார். இதனால் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டார். ஆனால் இதனை ஏற்க மறுத்து, ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் உறுதி :
அவசர சட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது குறித்து போராட்ட களத்தில் இருக்கும் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், முதல்வரின் இந்த அறிவிப்பை ஏற்க முடியாது. இது வெறும் கண்துடைப்பு. எங்களுக்கு அவசர சட்டம் வேண்டாம். நிரந்தர தீர்வு தான் வேண்டும். அனைத்து ஆண்டுகளும் தடையின்றி ஜல்லிக்கட்டு, நிரந்தரமாக நடத்தப்பட வழிவகை செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். நிரந்தர சட்டம் கொண்ட வரும் வரை கலைந்து செல்ல மாட்டோம். ஆனால் அவசர சட்டம் கொண்டு வருவதாக முதல்வர் அறிவித்துள்ளது உலக தமிழர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. முதல்வரின் அறிவிப்பு வரவேற்கதக்கது.
தடை நிரந்தரமாக நீங்க வேண்டும். இது தொடர்பாக போராட்ட களத்தில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் சமூக வலைதளங்கள் மூலம் தகவல் அனுப்பி வருகிறோம். முதல்வரின் அறிவிப்பை மட்டும் நம்பி போராட்டத்தை கை விட மாட்டோம். இவ்வாறு மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை மெரீனாவில் நடக்கும் போராட்டத்தில் போலீஸ் ஒருவர் சீருடையில் வந்து ஆதரவு தெரிவித்து பேசியது, மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. போலீசார் ஆதரவாக இருந்தும் அவர்களால் அதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என தெரிவித்தார்.
அலங்காநல்லூர் மக்கள் உறுதி :
ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் அலங்காநல்லூர் மக்கள், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், காளைகளை காட்சிபடுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்திருந்தனர். தற்போது அவசர சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளதை வரவேற்றுள்ள அவர்கள், காளையை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் இன்று பகல் 11 மணிக்கு கிராம மக்கள் கூடி அவசர கூட்டம் நடத்த உள்ளனர். அந்த கூட்டத்தில் இன்று, அனைத்து கட்சிக் கொடிகளையும் அரைக்கம்பத்தில் பறக்க விட முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English summary:
Chennai: jallikattu carry one or two days of the imposition of emergency law to be held in the jallikattu o pannirselvam Delhi Chief Minister announced this morning. They urged that it should abandon the struggle. But refused to accept it, the students will continue to fight until the jallikattu said emphatically.