காந்திநகர்: ‛துடிப்பான குஜராத்' இன் எட்டாவது மாநாடு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று(ஜன.,9) குஜராத் செல்கிறார்.
துடிப்பானகுஜராத் உலக மாநாடு:
குஜராத் மாநிலம் காந்திநகரில் ஜன.,10 முதல் 13-ம் தேதி வரை ‛ துடிப்பான குஜராத்' என்ற பெயரிலான உலகளவிலான மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.மேலும், காந்திநகர் ரயில் நிலைய அபிவிருத்தி பணிக்கான பூமி பூஜையிலும் கலந்து கொள்கிறார். மும்பை பங்குச்சந்தை சார்பில் அமைக்கப்பட உள்ள நாட்டின் முதலாவது சர்வதேச செலாவணி மையத்தை துவக்கி வைக்கிறார்.
நோபல் பரிசு பெற்ற இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உட்பட ஒன்பது முக்கிய நபர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். மேலும் மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறும் வர்த்தக கண்காட்சியில் சுமார் 15 லட்சம் மக்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர்கள் பங்கேற்பு:
விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதமரை வரவேற்பதற்காக குஜராத் விமான நிலையத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில பா.ஜ.,வின் ஊடக செய்தி தொடர்பாளர் ஹர்சத் படேல் தெரிவித்துள்ளார். மேலும் 13-ம் தேதி வரையில் நடைபெறும் மாநாட்டில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள், வர்த்தக பிரமுகர்கள் மற்றும் 12க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்.
English summary:
Gandhinagar: 'Vibrant Gujarat' summit of the eighth day visit today to attend various events, including the Prime Minister today (Mat., 9) goes to Gujarat.