புது தில்லி: உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, மக்களால் எவ்வளவு பழைய நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டன? என்ற எண்ணிக்கையை விரைவில் வெளியிடுவோம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தது. அதைத் தொடர்ந்து அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக் கொள்வதற்கும், டெபாசிட் செய்வதற்கும் அவகாசம் அளிக்கப்பட்டது.
50 தினங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை டிசம்பர் 30-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. அந்த நாள் வரை புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய நோட்டுகளில் சுமார் 95 சதவீதம் திரும்பி வந்து விட்டதாக பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இதுவரை மக்களால் ஒப்படைக்கப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகள் எவ்வளவு? என்பது தொடர்பாக பல்வேறு மதிப்பீடுகள் வெளிவந்துள்ளன. எனினும், அவ்வப்போது எவ்வளவு பணம் திரும்பி வந்துள்ளது என்பது தொடர்பாக நாங்கள் வெளியிட்டு வந்துள்ள மதிப்பீடானது நாடு முழுவதும் உள்ள எங்களது பண இருப்பு வைக்கும் வங்கிகளில் (கரன்சி செஸ்ட்) மேற்கொள்ளப்பட்ட நோட்டு எண்ணும் பணி அடிப்படையிலானது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ள நிலையில், திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையை மீண்டும் சரிபார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், எண்ணும் பணியில் நடைபெறக் கூடிய தவறுகள், இரண்டு முறை எண்ணப்படுவது போன்றவற்றைக் கருத்தில் கொள்ளும்போது இந்த நடவடிக்கை அவசியமாகிறது.
ஏற்கெனவே இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. அது முடிவடையும் வரை, வெளிவரக் கூடிய எந்த மதிப்பீடும் மக்களிடம் இருந்து திரும்பி வந்த செல்லாத நோட்டுகளின் உண்மையான எண்ணிக்கையைக் காட்டாது.
தற்போது மேற்கொள்ளப்படும் மறு எண்ணிக்கை நடவடிக்கையை விரைவாக முடிப்பதற்கு ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மிக விரைவில் அந்த எண்ணிக்கையை வெளியிடுவோம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் கடைசி நாளன்று, இதுவரை தங்களிடம் டெபாசிட் செய்யப்பட்ட உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளின் விவரங்களை வங்கிப் பணி நேரம் முடிந்ததும் தெரிவிக்குமாறு அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டிருந்தது.
இதனிடையே, 50 தினங்களாக மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின்போது ரிசர்வ் வங்கியிடம் சுமார் ரூ.15 லட்சம் கோடி அளவுக்கு டெபாசிட் செய்யப்பட்டதாக உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
English summary:
NEW DELHI: The high value of the transaction, after the withdrawal of the bill, people were turned away as much of the old banknotes? The Reserve Bank has announced that it will soon disclose the number.