சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினர்நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சீருடையில் வந்த போலீஸ் ஒருவர் பேசியதாவது: டில்லி சென்றுள்ள முதல்வர் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முடிவுடன் வர வேண்டும். இல்லையென்றால் வர வேண்டாம். விவசாயத்திற்கு முதன்முதலில் துணைக்கு அழைக்கப்பட்டது காளைகள் தான். தமிழகத்தில் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் கூட உண்டு. பசு தரும் பாலை குடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எந்த போராட்டத்திலும் போலீசார் கலந்து கொண்டது கிடையாது. ஆனால், இந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், நான் இதில் கலந்து கொண்டுள்ளேன். போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால் எனக்கு பயம் ஏதுமில்லை. போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிவிட்டு உயரதிகாரிகளை பார்த்து விட்டு ஓட இங்கு வரவில்லை. செயற்கை உரங்களை பயன்படுத்தி மண்ணை சாகடித்து விட்டனர். தற்போது விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். இதனை தடுக்க அரசு என்ன செய்தது.
பின் வாங்க மாட்டோம்:
மகாத்மா காந்தியும் இந்த மண்ணில் தான் பிறந்தார். நேதாஜியும் இந்த மண்ணில் தான் பிறந்தார். காந்தி மண்டபம் மதுரையில் உள்ளது. இங்கு போராட்டம் அமைதியாக நடந்து வருகிறது. காந்தி பிறந்த மண்ணில் தான் பிறந்ததாக கூறிக்கொள்ளும் பிரதமர் மோடிக்கு இது தெரியாதா. தமிழன் எப்போதும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டான். நான் பஞ்சம் பிழைக்க ராமநாதபுரத்திலிருந்து வந்தவன். தற்போது பஞ்சம் பிழைக்க அமெரிக்காவா செல்ல முடியும். இந்த போராட்டம் வெற்றி பெறும். இதன் பின்னர் மணல் திருட்டுக்கு எதிராக போராட வேண்டும் எனக்கூறினார். போராட்டத்தில் மதியழகு பேச்சை கேட்ட இளைஞர்கள் ஆர்ப்பரித்து தோளில் தூக்கி பாராட்டினர்
English summary:
Chennai: Jallikattu in favor of young people have been demonstrating on the Marina beach. Visiting various supporters have expressed support.