சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு, தன் வீட்டு முன்பு குடும்பத்தாருடன் கறுப்பு உடையணிந்து மவுனமான முறையில் போராட்டம் நடத்தினார். அவருடன் சேர்ந்து ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா நெருங்கிவிட்டது. இன்னும் ஒருநாளே உள்ள நிலையில் கடைசிகட்ட முயற்சியாக ஜல்லிக்கட்டுக்காக ஆதரவு வேண்டி மாநிலம் முழுக்க பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றனர். அரசியல் கட்சியினர், மாணவர்கள், திரையுலகினர் என பலரும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சிம்பு, மிகவும் ஆவேசமாக பேசினார். குறிப்பாக தமிழர்களின் கலாச்சாரத்தின் மீது வைத்ததை பொறுத்து கொள்ள முடியாது. அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் நாம் பிளவுப்பட்டு கிடப்பதை எண்ணி வேதனையாக இருக்கிறது. எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி தமிழர்களை அநாதையாக்கிவிட்டார்கள் என்றார். அதோடு அவரவர் வீட்டு முன்பு 10 நிமிடம் எழுந்து நின்று மவுன போராட்டம் நடத்துங்கள் என்றார்.
மவுன போராட்டம் :
அதன்படி நடிகர் சிம்பு இன்று தி.நகரில் உள்ள வீட்டு முன்பு கறுப்பு உடையணிந்து மவுன போராட்டம் நடத்தினார். அவருடன் அவரது அம்மா உஷா, அப்பா டி.ராஜேந்தர் உள்ளிட்ட குடும்பத்தாரும், ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
இது ஆரம்பம் தான்... :
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு... ‛‛தமிழ்நாட்டிற்காக வந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி, என்னாலும் கூட்டம் திரட்ட முடியும் என்பதற்கு இது தான் சாட்சி. சிம்பு படத்தில் மட்டும் தான் ஹீரோ என்று நினைக்க வேண்டாம். என் பின்னால் யாரும் வர வேண்டாம், நீங்கள் முன்னாடி போங்கள் நான் உங்கள் பின்னால் வருவேன். போகும் போது எதையும் எடுத்து கொண்டு போக முடியாது, கொடுத்துவிட்டு போகலாம். இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடந்தே தீரணும், கண்டிப்பாக நடக்கும், இது ஆரம்ப கட்டம் தான். எனக்கு இந்த மாதிரி ரசிகர்கள் கிடைத்தது மகிழ்ச்சி, தமிழனாக பிறந்தது மகிழ்ச்சி என்று கூறினார்.
English summary:
Chennai: Jallikattu chip supporting actor, dressed in black with his family home before the fight, held in mute mode. He also took part, along with numerous fans.