சென்னை: ‛சென்னை மெரினா கடற்கரை எதிரில் உள்ள நடிகர் சிவாஜி சிலை, மே, 18 ம் தேதிக்குள் இடம் மாற்றம் செய்யப்படும்' என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
கோர்ட்டில் வழக்கு:
தி.மு.க., ஆட்சியில், சென்னை மெரினா கடற்கரை எதிரில், காமராஜர் சாலை - ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், நடிகர் சிவாஜிக்கு சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், அதை அகற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில், நாகராஜன் என்பவர், மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் அக்னிஹோத்ரி, சசிதரன் ஆகியோர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்', 'சிவாஜி சிலையை அகற்றுவது குறித்து, அரசு முடிவு எடுக்க வேண்டும்' என, 2014 ஜனவரியில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, சிவாஜி சமூகநல பேரவை தலைவர் சந்திரசேகரன், மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் இருக்கும்போது, 'நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை' என, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'சிவாஜி சிலை அகற்றப்பட்டு, மணிமண்டபத்தில் வைக்கப்படும்; அக்டோபரில் மணிமண்டபம் கட்டும் பணி துவங்கி, 2017ல் முடியும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, நீதிபதிகள், 'மணிமண்டபம் கட்ட, இரண்டு ஆண்டுகள் ஆகுமா; அதுவரை சிலையை அகற்ற மாட்டீர்களா' என, கேள்வி எழுப்பினர். அரசிடம் கேட்டு தெரிவிப்பதாக, அட்வகேட் ஜெனரல் கூறியதை தொடர்ந்து, விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வரும் மே மாதம், 18 ம் தேதிக்குள் சிலை இடம் மாற்றம் செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
English summary:
Chennai: Actor Shivaji statue at the Marina beach in Chennai, May, 18, is adjusted by the location as the Madras High Court has confirmed the government.