புதுடில்லி : ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்காக ‛வாட்ஸ் அப்' எண் வெளியிடப்பட்டது. ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் இதனை அறிமுகப்படுத்தினார்.
பரபரப்பு:
எல்லையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் தங்களுக்கு தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக பி.எஸ்.எப்., வீரர் ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில் வேறு சில பி.எஸ்.எப்., வீரர்களும், ராணுவ வீரர்களும் தங்கள் குறைகளை சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எச்சரிக்கை:
இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் தங்கள் குறைகளை சமூகவலைதளங்களில் வெளியிடக் கூடாது என இந்திய ராணுவத் தலைமைத் தளபதி விபின் ராவத் எச்சரிக்கை விடுத்தார். மேலும் புகார் பெட்டியில் தங்களது குறைகளை எழுதி அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
அறிமுகம்:
இந்நிலையில் ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளை தெரிவிப்பதற்காக ‛வாட்ஸ் அப்' எண்ணை விபின் ராவத் அறிமுகப்படுத்தினார். தங்களது குறைகளை +91 9643300008 என்ற எண்ணுக்கு அனுப்பி, நிவாரணம் தேடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
English summary:
NEW DELHI: Army soldiers to express their grievances, "Whats Up" is released. Army chief of staff, introduced by Vipin Rawat.