சென்னை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் களமிறங்கி வருகின்றனர்.
பெருகும் ஆதரவு :
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை - அலங்காநல்லூரில் 3வது நாளாகவும், சென்னை மெரீனா, நெல்லை, கோவை ஆகிய பகுதிகளில் 2வது நாளாகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கல்லூரி மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவுகளும் பெருகி வருகிறது. மாணவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும், பெண்களும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர்கள், சின்னத்திரை நடிகர்கள் ஆகியோரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கடையடைப்பு போராட்டம் :
சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் மற்றும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, ஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள் நடத்தும் பிரம்மாண்ட போராட்டத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை கிண்டியில் ஒலிம்பியா நிறுவனத்தில் பணிபுரியும் ஐ.டி., ஊழியர்கள் பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி பூச்சம்பள்ளியில் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி, மாணவர்களுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி மற்றும் மதுரையில் ஜனவரி 20 ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக வணிகள்கள் அறிவித்துள்ளனர்.
English Summary:
Chennai: Jallikattu for and against beta agitating students in the state of Tamil Nadu and Puducherry, they have made it in favor of a different group.