சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் இன்று முதல் விடுமுறை அறிவித்துள்ளதால் ஜல்லிகட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் போராட்டம் இன்று மேலும் வலுவடையும் சூழல் உருவாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக ஜல்லிகட்டிற்காக இளைஞர்களின் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இரவு பகலாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை பொங்கல் மற்றும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள் விடுமுறையில் இருந்தன. இந்நிலையில் நேற்று கல்வி நிறுவனங்கள் திறந்த நிலையில் பல கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கினர். இதனால், தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகள் நேற்று செயல்படவில்லை.
இந்நிலையில், கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள உத்தரவில் ‛கல்லூரிகள் அமைந்துள்ள இடங்களில் நிலவும் சூழலை பொறுத்து கல்லூரி நிர்வாகங்கள் விடுமுறை குறித்த முடிவுகளை எடுக்கலாம்' என அறிவித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் இன்று முதல் விடுமுறை அறிவித்துள்ளன. அதன் விபரம் வருமாறு:
* சென்னையில் 31 கல்லுாரிகள் இன்று முதல் விடுமுறை
*அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் சட்ட கல்லுாரிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை.
*கோவை வேளாண்மை பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை
*சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு வரும் 22ம் தேதி வரை விடுமுறை
*கோவை அரசு கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
* கோவை பாரதியார் பல்கலைகழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை
*மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை
மேலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக விடுதியில் உள்ள மாணவ மாணவிகள் விடுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பல கல்லூரிகளில் விடுதி மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
கல்லூரி, பல்கலை., நிர்வாகங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டிற்காக தமிழகம் முழவதும் நடந்து வரும் போராட்டம் மேலும் வலுவடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
English Summary:
Chennai: Tamil Nadu by most colleges and universities, today announced the first holiday jallikattu fight today's youth-friendly environment has also become stronger.