சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து அருகே, உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழகத்தை நோக்கி, மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று, தமிழக கடலோர பகுதிக்குள் நுழையும் என,எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்களில், இன்று லேசான மழையும், நாளை முதல் இரு தினங்களுக்கு, மாநிலம் முழுவதும் அனேக இடங்களில் நல்ல மழை பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை இரவில் பனியும், காலையில், மழையும் பெய்யும். கடலிலும், கடற்கரையிலும், மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். அதனால், கடலுக்குள் செல்லும் மீனவர்கள், எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக சென்று வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
Chennai: Tamil Nadu and Puducherry, today, tomorrow, rain is very likely that, Chennai Meteorological Center said.