சென்னை: ‛ வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை, நாளை முதல் குறையும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:
வங்க கடலில், மன்னார் வளைகுடா அருகில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை, இன்று குமரி கடல் அருகே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, பாம்பனில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழையும், ராமேஸ்வரத்தில் 11 செ.மீ. மழையும் பெய்துள்ளது. அடுத்த, 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.
சில இடங்களில் லேசான மழை :
எனினும், நாளை முதல் மழை பொழிவு குறையும். கடந்த, 24 மணி நேரத்தில் மிக அதிகபட்சமாக, பாம்பனில் மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Chennai: The lower the air pressure formed in the Bay of Bengal by the lower level, rainfalls now in the state, the first cool day that, according to the Meteorological Centre, Chennai.