புதுடில்லி: ரயில்வே துறையில் பணியாற்றும் தன் மனைவிக்கு, பணி இடமாற்றம் கோரிய, தகவல் தொடர்புத்துறை நிபுணரை, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, வழக்கத்திற்கு மாறாக கடிந்து கொண்டார்.
வெளியுறவு அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜ், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தை பயன்படுத்தி, மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு வழங்கி வருகிறார்.
வளைகுடா நாடுகளில் இருந்து, இந்தியா திரும்ப முடியாமல் தவித்த ஏராளமான இந்தியர்களுக்கு, தக்க நேரத்தில் உதவி செய்து, பாராட்டு பெற்றவர், சுஷ்மா.
எரிச்சல்:
இந்நிலையில், ரயில்வேயில் பணிபுரியும் தன் மனைவிக்கு, பணி இடமாற்றம் பெற்றுத் தரும்படி, தகவல் தொழில்நுட்பத்துறை நிபுணராக பணியாற்றும், ஸ்மித்ராஜ் என்பவர், சுஷ்மாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். எப்போதும் நிதானமாக பதில் அளிக்கும் சுஷ்மா, ஸ்மித்ராஜின் வேண்டுகோளால் எரிச்சல் அடைந்தார்.
சஸ்பெண்ட் செய்திருப்பேன்:
'என் துறையில், நீங்களோ, உங்கள் மனைவியோ பணியாற்றி இருந்தால், பணி இடமாற்றம் கோரியதற்காக, இந்நேரம், 'சஸ்பெண்ட்' செய்திருப்பேன்' என, கோபமாக பதில் அளித்தார் சுஷ்மா. பின், அவரது கோரிக்கையை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் பார்வைக்கு, 'டேக்' செய்தார். அதை கவனித்த சுரேஷ் பிரபு, பணி இடமாற்றங்களை கவனிக்கும் பொறுப்பு, தன்னிடம் இல்லை எனக் கூறி, ரயில்வே வாரியத்திற்கு, ஸ்மித்ராஜின் கோரிக்கையை அனுப்பி வைத்தார்.
English Summary:
NEW DELHI: his wife working in the railway sector, the mission requested relocation, communications expert, Foreign Affairs Minister Sushma, unusually admonished.