சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் நாளை(20ம் தேதி) ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு பல தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் நாளை ஸ்டிரைக்கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன. இதில், 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளன. மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை கால்டாக்சி, ஆட்டோ, வேன் ஆகியவையும் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை போக்குவரத்தில் சிக்கல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கோவையில், மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக, நாளை லாரிகள் இயங்காது என கோவை மாவட்ட லாரிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதனால், அத்யாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 10 லட்சம் வாகனங்கள் இயங்காது என தெரிகிறது.
கடையடைப்பு:
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கோவை, கும்பகோணம், திருப்பூர், காரைக்குடியில் முழு கடையடைப்பு போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட குறுந்தொழில் சங்க தலைவர் கூறுகையில், ‛‛ஜல்லிக்கட்டுக்காக கோவையில் வரலாறு காணாத வகையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் பிரதமர் மோடியின் அறிவிப்பு வேதனை அளிக்கிறது. மாணவர்களின் போராட்டத்திற்கு கோவை மாவட்ட குறுந்தொழில் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது,'' என்றார்.
English Summary:
Chennai: Jallikattu Transport Association in support of the unions tomorrow (20 th) announced that it would engage in a strike.