புதுடில்லி: உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா இந்திய மூவர்ண தேசிய கொடி நிறத்திலான ஒளிவிளக்குகளால் பிரகாசிக்கிறது.
இந்தியாவின் 68 வது குடியரசு தின விழா நாளை (ஜன.,26) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. புதுடில்லியில் நடைபெறும் விழாவில் அபுதாபி இளவரசர் முகமது பின் ஜயாத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்திய கொடிக்கு கவுரவம்:
இதைமுன்னிட்டு, துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா இந்திய மூவர்ண தேசிய கொடியின் நிறத்திலான எல்.இ.டி., விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரகாசிக்கிறது. இன்று மற்றும் நாளை அந்நாட்டு நேரப்படி மாலை 6.15 மணி, 7.15 மணி, 8.15 மணி ஆகிய நேரங்களில் விளக்குகள் ஒளிர்விக்கப்படுகிறது. இத்தகவலை புர்ஜ் கலிபாவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது. 2,716.5 அடி உயரமுள்ள புர்ஜ் கலிபா கட்டடம் உலகளவில் மிக உயரமான கட்டடம், மிக உயரமான லிப்டுகள் கொண்ட கட்டடம் போன்ற பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

English summary:
NEW DELHI: The world's tallest building, Burj Khalifa in the Indian tricolor national flag, colored lights shine.