வாஷிங்டன்: அமெரிக்காவின் 45-வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவியேற்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டெனால்டு டிரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக தேர்வானார்.
45வது அதிபர்:
வெள்ளை மாளிகையில் இன்று(ஜன.,20) நடந்த பதவி ஏற்பு விழாவில் அமெரிக்காவின் 45- வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். துணை அதிபராக பென்ஸி பதவி ஏற்றார். இருவருக்கும் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு:
பதவி ஏற்பு விழாவில் இந்திய தூதர் நவ்ஜேத் சிங்ஷர்மா, அமெரிக்க முன்னாள் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவில் அமெரிக்க தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அமெரிக்கர்களின் பலத்த கரகோஷத்திற்கிடையே அதிபராக டிரம்ப் பதவியேற்றார்.
பதவியேற்பு விழாவில் டிரம்ப் பேசியதாவது:
* அமெரிக்காவை மேலும் வலுப்படுத்துவது தான் எனது நோக்கம்
* அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்
* எல்லையைப் பாதுகாக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும்
*அதிகாரம் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்
* அமெரிக்கா எப்போதும் முதலிடத்தில் நிலைத்திருக்கும்
* எனது அரசு எடுக்கும் அனைத்து முடிவும் மக்களின் நலன் சார்ந்ததாகவே இருக்கும்
*இது பதவியேற்பு விழா அல்ல, மக்களுக்கான விழா. இவ்வாறு அவர் பேசினார்.
மோடி வாழ்த்து:
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ‛அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு எனது வாழ்த்துகள். வரும் காலங்களில் அமெரிக்கா உங்கள் தலைமையில் பெரும் சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன். இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுப்பெற சேர்ந்து பணியாற்றுவோம்' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
English summary:
Washington : America's 45th president was sworn in as the donald Trump. The Republican candidate for the US presidential election, Democratic candidate Hillary Clinton competed donald Trump. Trump won the US presidential election and won it.