வாஷிங்டன்: 7 நாடுகளை சேர்ந்தவர்களை அமெரிக்காவில் அனுமதிக்க தடை விதிக்கும் அதிபர் டிரம்ப் முடிவிற்கு மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிரியா நாட்டு அகதிகள், அமெரிக்காவில் நுழைய, அதிபர் டொனால்டு டிரம்ப் தடை விதித்துள்ளார். ஈராக், ஈரான் உள்ளிட்ட ஆறு நாடுகளை சேர்ந்தவர்களை, அடுத்த, 90 நாட்களுக்கு, அமெரிக்காவில் அனுமதிக்க தடை விதிக்கும் நிர்வாக உத்தரவிலும், டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.
இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ., நாதெல்லா கூறியதாவது: நானும் குடியேறி வந்தவன் தான். சி.இ.ஓ., என்ற அனுபவத்தில், குடியேற்றத்தினால் ஏற்பட்டுள்ள நல்ல பலன்களை நான் உணர்ந்துள்ளேன். இந்த பலன்கள் நமது நிறுவனம், அமெரிக்கா மற்றும் உலகிற்கு நல்லது. இந்த முக்கியமான விஷயத்தில் நாம் தொடர்ந்து போராடுவோம் எனக்கூறினார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிராட் ஸ்மித் கூறியதாவது: புதிய உத்தரவால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடியேற்ற பிரச்னை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல ஊழியர்களுக்கு முக்கியமான விஷயம். இந்த விவகாரத்தை பல முறை நாதெல்லா பேசியுள்ளார். நிறுவனம் என்ற அடிப்படையில், வலிமையான அதிக கற்றறிந்த மக்கள் குடியேறுவதில் தவறில்லை என்பதில் உறுதியாக உள்ளோம் எனக்கூறியுள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை கூறியதாவது:
இந்த உத்தரவு, திறமையானவர்களை அமெரிக்கா கொண்டு வருவதில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும் எனக்கூறியுள்ள அவர், வெளிநாடு சென்ற தனது ஊழியர்களை திரும்பி வருமாறு இமெயில் அனுப்பியுள்ளார்.
டிரம்ப் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ., மார்க் ஜூக்கர்பெர்க், நாட்டை பாதுகாக்க வேண்டியது முக்கியமானது. அதேநேரத்தில், அச்சுறுத்தல் உள்ள நபர்களை மட்டும் தடுக்க வேண்டும். உதவி தேவைப்படுபவர்களுக்கும், அகதிகளுக்கும் கதவுகளை திறுந்து வைக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
English summary:
Washington: 7 to allow countries to ban the participation of President of the United States Trump concluded Microsoft, Google, Apple and other institutions have protested.