கோல்கட்டா : 14ம் நூற்றாண்டில் டில்லிலை ஆட்சி புரிந்த துக்ளக் மன்னர் போல் பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கி பேசினார்.
துக்ளக் தர்பார்:
மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் நடைபெறும் பாரம்பரிய இசை விழாவான ‛ஜாய்தேவ் மேளா'வில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, துக்ளக் தர்பார் நடத்தி வருகிறது. எத்தனையோ மத்திய அரசுகளின் செயல்பாட்டை பார்த்திருக்கிறேன். மோடி அரசை போல், மிக மோசமாக செயல்படும் அரசை பார்த்ததில்லை.
ஊழல்வாதி முத்திரை:
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், மக்கள் உழைத்து சம்பாதித்த பணம் கறுப்பாகவும், பா.ஜ.,வின் கறுப்புப் பணம் வெள்ளையாகவும் மாறிவிட்டது. மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். அவர்களை சிக்க வைக்க விசாரணை அமைப்புகள் அமைக்கப்படுகின்றன. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
KOLKATA : As the ruler of the Tughlaq who ruled Delhi in the 14th century as the West Bengal Chief Minister Mamata Banerjee attacked Modi spoke rules.