லக்னோ : ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், உ.பி.,யில் ஆட்சியை கைப்பற்றுவதிலேயே பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. அங்கு, 14 ஆண்டு கால பிராந்திய கட்சிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நோக்கம்.
சிக்கலில் பா.ஜ., :
உ.பி.,யில் மொத்தமுள்ள, 403 இடங்களில், 150 தொகுதிகளில் பா.ஜ., சார்பில் போட்டியிடுவதற்கு சரியான வேட்பாளர்கள் இல்லை. இதனால் தேர்தலுக்கு, 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதும், சரியான வேட்பாளரை தேர்வு செய்வதும் பா.ஜ.,விற்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
மாறிய போன அரசியல் களம் :
ஜாதி மற்றும் மத ரீதியிலான பிரச்னைகளே பா.ஜ.,விற்கு உ.பி.,யில் வலுவான அடித்தளம் அமையாமல் போனதற்கு காரணம் என கூறப்படுகிறது. ஜாதி அடிப்படையில் பா.ஜ,விற்கு என பாரம்பரிய ஓட்டு வங்கி உள்ளது. ஆனால் தற்போது அரசியல் நிலை மாறி விட்டது. இதனால் ஜாதி அரசியல் பெரிய அளவில் எடுபடாமல் போனதால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் மட்டுமே பா.ஜ., ஆதரவாளர்கள் அதிகம் உள்ளனர். சமாஜ்வாதியில் இருக்கும் யாதவாக்களோ அல்லது மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதியில் இருக்கும் தலித்களோ பா.ஜ., பக்கம் செல்ல தயாராக இல்லை.
மோடி மீதான நம்பிக்கை :
கடந்த, 2014 பார்லி., தேர்தலில் உ.பி.,யில் பா.ஜ., பெற்ற 80 இடங்களும் யாதவர்கள் மற்றும் தலித்கள் இல்லாத மற்ற ஜாதியினரின் ஓட்டுக்களால் மட்டுமே. இதுவரை பா.ஜ., வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்களும் மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் தான். வேட்பாளர்களை தேர்வு செய்வதே பா.ஜ.,விற்கு மிகப் பெரிய சவாலாகவும், சிக்கலாகவும் உள்ளதால், அது காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணிக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது. முழுமையான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாத நிலையில் உ.பி.,யில் தேர்தல் அறிக்கையை பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா இன்று வெளியிட உள்ளார். மோடி பிரசாரத்திற்கு பிறகு உ.பி.,யில் பா.ஜ.,வின் நிலை மாறும் என அக்கட்சியினர் தீவிரமாக நம்புவதால், தேர்தலில் பணிகளில் விறுவிறுப்பு காட்டி வருகின்றனர்.
English summary:
LUCKNOW: for the state assembly elections in UP, BJP occupy standard rule, the intensity of the pose. There, the 14-year term is to come up with regional parties to end the rule of the BJP's purpose.