புதுடில்லி : அடுத்த மாதம் நடக்க இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலில் உ.பி., கோவா, பஞ்சாப் மாநிலங்களில் தொங்கு சட்டசபை அமையும். உத்திரகாண்டில் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
3 ல் தொங்கு சட்டசபை :
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 4 ம் தேதி துவங்கி, மார்ச் 8 வரை நடக்க உள்ளது. மார்ச் 11 ம் தேதி தேர்தல் முடிவு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தி வீக் பத்திரிக்கை மற்றும் ஹன்சா ஆராய்ச்சி மையம் இணைந்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளன. இதன்படி, உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் தொங்கு சட்டசபை அமையும். உத்தரகாண்டில் தனிப்பெரும்பான்மை பெற்று பா.ஜ., ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் 5 மாநில தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு எத்தனை இடங்கள் :
உ.பி.,யில் மொத்தமுள்ள 403 இடங்களில் பா.ஜ., 192 முதல் 196 இடங்களில் வெற்றி பெறும். அதாவது பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்களையே பெறும். சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி 178 முதல் 182 இடங்களை பிடிக்கும். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 20 முதல் 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். பஞ்சாப்பை பொறுத்தவரை மொத்தமுள்ள 117 இடங்களில் காங்கிரஸ் 49 முதல் 51 இடங்களை பிடிக்கும். 33 முதல் 35 இடங்களை பிடித்து ஆம்ஆத்மி 2வது இடம் பிடிக்கும். பா.ஜ., கூட்டணி 28 முதல் 30 இடங்களை மட்டுமே பெறும். உத்த ரகாண்டில், தனிபெரும்பான்மையுடன் 70 ல் 37 முதல் 39 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சி அமைக்கும். காங்., 27 முதல் 29 இடங்களை பிடிக்கும். கோவாவில் 40 இடங்களில் பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக 17 முதல் 19 இடங்களை பிடிக்கும். ஆம்ஆத்மி 3 முதல் 5 இடங்களையும், காங்., 11 முதல் 13 இடங்களையும் பிடிக்கும். இவ்வாறு கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
English Summary:
India will be 5 next month's assembly elections in Uttar Pradesh, Goa and Punjab will be a hung assembly. Uttarakhand BJP regime that it will take before the election, a poll has revealed.