
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: உ.பி., சட்டசபை தேர்தலில் காங்கிரசும் சமாஜ்வாதியும் இணைந்து எதிர்கொள்ளும். கூட்டணி குறித்த விபரங்கள், தொகுதி பங்கீடு குறித்த தகவல்கள்
இன்னும் இரண்டொரு நாளில் வெளியிடப்படும் என்றார்.
சைக்கிள் சின்னத்தை பெற்ற மகிழ்ச்சியில் உள்ள சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: காங்கிரசுடன் கூட்டணி தொடர்பான முடிவு இன்னும் இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும். மதவாத சக்திகளை எதிர்க்கவே காங்கிரசுடன் கூட்டணி வைப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் அகிலேஷ் டில்லி வந்து ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.
English Summary:
NEW DELHI: Uttar Pradesh assembly elections, with the ruling Samajwadi Party has decided to confront the Congress.