வாஷிங்டன் -அமெரிக்க அரசின் சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு துறைக்கான இணையதளம் முடங்கியதால் நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இணையதளம் முடங்கியது:
அமெரிக்காவின் அட்லான்ட்டா நகர விமான நிலையத்தில் உள்ள சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறைக்கான இணையதளம் நேற்று முன்தினம் மாலை முடங்கியது. இதனால், நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று, புத்தாண்டு விடுமுறையை கொண்டாடிவிட்டு தங்களது வசிப்படத்துக்கு வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் அட்லான்ட்டா விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்புக்கு உள்ளாகினர். கம்ப்யூட்டர்கள் மூலமாக சரிபார்க்க வேண்டிய விபரங்களை எல்லாம் பழங்கால நடைமுறையான ஆவணங்களை சரிபார்க்கப்படுவதை கண்ட சில பயணிகள் எரிச்சல் அடைந்தனர்.
நீண்ட நேரத்திற்கு பின் சரியானது:
நான்கைந்து மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க நேர்ந்த அவலத்தை பலர் புகைப்படங்களுடன் ட்விட்டர் மூலம் பரிமாறி தங்களது ஆத்திரத்தை தீர்த்து கொண்டனர். மியாமி உள்ளிட்ட பிறநகரங்களில் உள்ள விமான நிலையங்களிலும் இதேநிலை நீடித்ததாகவும் (உள்ளூர் நேரப்படி) நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் இந்த குறைபாடு களையப்பட்டதாகவும், அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
English summary:
American State of Washington Department of Customs and Border Protection web disruption for passengers at airports across the country, suffering heavy.