புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைவுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே, அவர் படுகொலை செய்யப்பட்டால், இந்திய அரசியலில் ஏற்படும் மாற்றம் குறித்து அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தயாரித்தது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை சிஐஏ தயாரித்த ரகசிய அறிக்கைகள் பல தகவல் சுதந்திர சட்டத்தின் கீழ் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் ‘ராஜீவுக்குப்பின் இந்தியா...’ என்ற தலைப்பில் 23 பக்க அறிக்கை கடந்த 1986ம் ஆண்டு மார்ச் மாதமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் சில விஷயங்கள் நீக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதில் முதல் வரியிலேயே, பிரதமர் ராஜீவ் காந்தியின் பதவிக் காலம் 1989ம் ஆண்டு முடியும் முன்பே, அவர் படுகொலை செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு பல தீவிரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் உள்ளது. இது படுகொலையில் முடியலாம். சீக்கியர் அல்லது காஷ்மீர் முஸ்லிமால் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டால், மதக்கலவரம் ஏற்படும். ராஜீவ் இல்லாத நிலை ஏற்பட்டால் இந்திய அரசியலில் என்ன மாற்றம் ஏற்படும், இந்தியா-அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான உறவுகள் எப்படி இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
ராஜீவுக்குப்பின் பி.வி.நரசிம்மராவ் அல்லது வி.பி.சிங் பிரதமராகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பெரும்பாலன விஷயங்கள் அதன்படியே நடந்தன. கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் சிஐஏ தெரிவித்த அமைப்பினர் படுகொலை செய்யவில்லை. ஆனால் சிஐஏ கூறியபடி நரசிம்ம ராவ் கடந்த 1991ம் ஆண்டு பிரதமரானார். இதேபோல் பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டம் குறித்து கடந்த 1982ம் ஆண்டிலேயே அமெரிக்கா கவலை தெரிவித்ததும், அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை, இது இந்தியாவின் பொய் பிரசாரம் எனவும், மின் உற்பத்திக்காக மட்டுமே அணுசக்தி திட்டத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது என அப்போதைய அமெரிக்க அதிபர் ரீகனிடம், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜியா-உல்-ஹக் உறுதி அளித்ததாகவும் சிஐஏ வெளியிட்ட ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
New Delhi: Former Prime Minister Rajiv Gandhi's death 5 years ago, but he was murdered, a change in Indian politics, according to US intelligence report produced currently. Many of the reports prepared by the CIA in secret US intelligence agencies recently released under the Freedom of Information Act.