புதுடில்லி : உதய் மின் திட்டத்தில் தமிழகம் இணைகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 9ம் தேதி டில்லியில் கையெழுத்ததாக உள்ளது.
‛உதய்' மின் திட்டம்:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 'உதய்' (உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ்) திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், 2015 செப்., வரை, மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் அந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
முதலில் எதிர்ப்பு:
உதய் திட்டத்துக்கு முதலில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து கடந்த ஜூலையில், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய மின் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளிடையே இதுகுறித்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்த ‛உதய்' திட்டத்தில் தமிழகம் 21வது மாநிலமாக இணைய உள்ளது.
கையெழுத்து:
‛உதய்' திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் 9ம் தேதி(ஜன.,9) டில்லியில் கையெழுத்தாக உள்ளது. மத்திய இணை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கையெழுத்திட உள்ளார். இது மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
NEW DELHI: Tamil Nadu joins Uday electric project. The MoU is on the 9th signature in Delhi.