புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு, கணக்கில் வராத 3 - 4 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை:
இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த நவ. 8ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது. இதன் பிறகு வங்கிகளில் மட்டும் கணக்கில் வராத 3 - 4 லட்சம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு 60 லட்சம் வங்கிக்கணக்குகளில் தலா ரூ. 2 லட்சம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
செயல்படாத கணக்கில்...
நவம்பர் 9 ம் தேதி முதல், வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வங்கிக்கணக்குகளில் ரூ.10,700 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பல கணக்குகளில் ரூ.16 ஆயிரம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. செயல்படாத வங்கி கணக்கில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது எனக்கூறினர்.
English Summary:
NEW DELHI: After vapase bill, unaccountable 3 - 4 lakh crore and deposits in banks.