பாட்னா: பீகாரில் விடுப்பு எடுப்பதில் தங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 4 போலீசாரை சுட்டுக்கொன்ற சக போலீஸ் கைது செய்யப்பட்டார்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத் நகரில் நவீன்நகர் பகுதியில் அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு மத்திய கம்பெனிகள் பாதுகாப்புபடை ( சி.ஐ.எஸ்.எப்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. ஷிப்ட் முறையில் சி.ஐ.எஸ்.எப். போலீசார் இங்கு பாதுகாப்புபணியில் ஈடுபட்ட வருகின்றனர்.
விடுப்பு தராத ஆத்திரம்:
இன்று பல்வீர்சிங் என்ற சி.ஐ.எஸ்.எப். வீரர் திடீரென தனது சர்வீஸ் துப்பாக்கியால் சக போலீசார் 4 பேரை சரமாரியாக சுட்டார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த 4 போலீசாரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தனர்.
பலியான போலீசார் பச்சா ஷர்மா, மிஸ்ரா, அரவிந்தகுமார், ராம் என தெரியவந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவர் உ.பி. மாநிலம் அலிகாரைச் சேர்ந்த பல்வீர்சிங் என்ற போலீஸ்கார் என்பதும், முன்கூட்டியே யார் முதலில் விடுமுறை எடுப்பது என்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறில் முடிந்ததால் விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தில் பல்வீர் சிங் சக போலீசார் 4 பேரை சுட்டது தெரியவந்தது. பல்வீர் சிங் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸ் கமிஷனர், டி.ஐ.ஜி. ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English summary:
Patna: Bihar, the dispute among themselves to take leave in the 4 police shot dead a fellow police was arrested.