பாட்னா:மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் மூச்சுத் திணறல் காரணமாக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூச்சுத்திணறல்:
பீகாரைச் சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான ராம் விலாஸ் பஸ்வான் மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சராக உள்ளார்.பாட்னாவில் இருந்த அவருக்கு இன்று இரவு 8.30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவலை அவரது இளைய சகோதரரும், அக்கட்சியின் தலைவர்களில் ஒருவருமான பசுபதி குமார் பராஸ் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் கட்சி சார்பில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டில்லியில் இருந்து இன்று(12-01-16) பாட்னா வந்துள்ளார். வந்த இடத்தில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் மருத்துவமனையில் அவரது மனைவி மற்றும் எம்.பி.யும் மகனுமான சிராக் பஸ்வான் ஆகியோர் இருக்கின்றனர்.
English summary:
Patna: Union Food and Civil Supplies Minister Ram Vilas Paswan, causing shortness of breath, was admitted to the ICU of the hospital.