டெல்லி: உத்திரப்பிரதேச அரசியல் களத்தில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. ஆளும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு 105 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கூட்டணி உறுதியானது. உத்திரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதியும் இதுவரை தேர்தலில் கூட்டணி வைத்ததில்லை. இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக இவ்விரு கட்சிகளும் கைகோர்த்துள்ளன. உத்திரப்பிரதேசத்தில் பிப்ரவரி 11-ல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அம்மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் 11-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
English summary:
New Delhi: Samajwadi Party in Uttar Pradesh in the political arena - Congress is assured. Samajwadi Party joined the governing coalition 105 seats allocated to the Congress. SP leader Akhilesh Yadav and Congress President Sonia Gandhi held coalition talks after the firm