திருவள்ளூர்: கிருஷ்ணா நதிநீர், தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது.
முதல்வர் பேச்சு:
பருவ மழை பொய்த்து போனதால், சென்னையில், குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, ஆந்திராவிடம் இருந்து, கூடுதலாக, கிருஷ்ணா நீர் பெற முடிவு செய்யப்பட்டது. அவசரம் கருதி, ஆந்திரா முதல்வர், சந்திரபாபு நாயுடுவை சந்திக்க, விஜயவாடா சென்றார். அங்கு, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அதிகாரிகளை சந்தித்து, பன்னீர் செல்வம் பேச்சு நடத்தினார். 'தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும்.
கிருஷ்ணா நீர் கிடைத்தால் மட்டுமே, சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும். எனவே, ஏப்ரல் வரை தொடர்ச்சியாக, 4 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும்' என, பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில், போதிய நீர் இருப்பு இல்லாததால், 2.5 டி.எம்.சி., மட்டும் உடனடியாக வழங்குவதாக, ஆந்திர முதல்வர் உறுதி அளித்தார்.
தாமதம்:
இந்நிலையில், கடந்த 9ம் தேதி கண்டலேறு அணையில் 1500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நிதி நீர் தமிழகம் வந்த சேர்ந்தது. தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டை 15 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. ஆந்திர விவசாயிகள் மதகுகளில் நீரை தேக்கியதால், தண்ணீர் வர தாமதமாகியது. தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று மூட வலியுறுத்தினர்.
English Summary:
Tiruvallur: Krishna water, Tamil Nadu territory reached Zero Point.