சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின், பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி அதிகாரத்தை அ.தி.மு.க.,வே தொடருகிறது. ஆனால், அந்த ஆட்சி, மத்திய பா.ஜ., அரசின் நிழல் அரசாகவே செயல்படுகிறது என, பன்னீர்செல்வம் செயல்பாடுகளை வைத்து பலரும் கூறுகின்றனர்.
திமுகவினர் எண்ணம்:
இதனால், பன்னீர்செல்வத்தை இறக்கி விட்டு, முதல்வர் பொறுப்பில், தன்னை நியமித்துக் கொள்ள வேண்டும் என்பதில், சசிகலாவும் தீவிரமாக களம் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் திமுகவினர் எண்ணம் வேறு மாதிரியாக இருக்கிறது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஜெயலலிதா இறந்ததுமே, அடுத்து தங்கள் ஆட்சி தான் என, தி.மு.க., தொண்டன் ஒவ்வொருவரும் கொண்டாட்டமானான். ஆனால், பெரிய அளவில் சிக்கல் எதுவும் இல்லாமல், மூன்றாவது முறையாகவும், பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் வந்து அமர்ந்தார். அவருக்கு வாழ்த்து சொன்ன ஸ்டாலின், அந்த பதவியில் எப்படியும் தான் அமர வேண்டும் என்ற தீவிரத்தில் களம் இறங்கினார்.
அ.தி.மு.க., தரப்பில் தன்னிடம் தொடர்பில் இருப்பவர்கள் மூலம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க., பக்கம் வருவார்களா என நூல் விட்டுப் பார்த்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை என்றதும், மேற்கொண்டு எவ்வித முயற்சியும் எடுக்காமல் இருந்து விட்டார். இதனால், அ.தி.மு.க.,வில் எவ்வித சலசலப்புகளும் இல்லாமல், சசிகலா, அ.தி.மு.க.,வின் பொது செயலராக நியமிக்கப்பட்டு விட்டார்.
இதனால், அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை தி.மு.க., தரப்பு சுருக்கிக் கொண்டு விட்டது. தற்போதைக்கு, அ.தி.மு.க., அரசு தொடர்பான அறிக்கை விமர்சனத்தின் காரத்தையும் குறைத்துக் கொள்ள ஸ்டாலின் திட்டமிட்டு செயல்படுகிறார். பன்னீர்செல்வத்தின் ஆட்சி ஆறு மாதங்களுக்கு நடக்கட்டும். அதன் பின் விமர்சிக்கலாம் என, கட்சியினரிடம், ஸ்டாலினே சொல்லிவிட்டதால், மாற்றுக் கட்சியினர் பற்றி விமர்சிக்கவே தி.மு.க.,வினர் தயக்கம் காட்டத் துவங்கி உள்ளனர்.
ஸ்டாலின் எண்ணம் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியையும்; கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
English summary:
After her death, the power head Panneerselvam Digg Wall continues. But the regime, the BJP, the state acts as the shadow of the state, many claim the Panneerselvam functions.