லக்னோ: உ பி., மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியில் உள்கட்சி மோதல் தற்போது கோர்ட், தேர்தல் கமிஷன் வரை போய்விட்டது.
ஆளும் சமாஜ்வாதி கட்சியில் அகிலேஷ், ஒரு பிரிவினராகவும், இவரது சித்தப்பா சிவ்பால் ஒருபிரிவினராகவும் செயல்பட்டு வந்தனர். அவரவர் ஆதரவாளர்கள் , எதிர்ப்பாளர்கள் கட்டம் கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று அகிலேஷ் கூட்டிய கூட்டத்தில் தானே தலைவர் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.
கோர்ட்டுக்கு செல்ல முடிவா ?
இந்நிலையில் அமர்சிங்கும், சிவபாலும் டில்லி சென்றுள்ளனர். இங்கு அவர்கள் தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் சந்தித்து முக்கிய பேச்சு நடத்துகின்றனர். இதில் கட்சியின் அதிகாரம் மற்றும் கட்சியின் சின்னமாக சைக்கிள் யாருக்கு என்பது குறித்து விவாதிப்பர். அமர்சிங் டில்லியில் உள்ள முலாயம்சிங் வீட்டிற்கு சென்று முக்கிய பேச்சு நடத்தினார். இதற்கிடையில் முலாயம்சிங் அளித்த பேட்டியில்; தவறு செய்து கொண்டிருப்பவர்கள் என்னை குற்றம் சுமத்துவதற்கு தகுதி கிடையாது. நான் எவ்வித தவறும் செய்யவில்லை. நான் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை. சைக்கிள் சின்னம் எங்களுடையது. இது எங்களுக்கே சொந்தம் என்றார்.
English Summary:
Lucknow: E B., In the state of internal conflict, the Court of Samajwadi Party, the election commission has gone up. The ruling Samajwadi Party Akhilesh, as a group, but part civp acted as his uncle. Their supporters, opponents grid tied excluded. Akhilesh himself president convened a meeting yesterday passed a resolution.