லக்னோ: குறைந்தளவு உடைகளை அணிய அனுமதிக்கும் ஆண்களே, அவர்களை அவமரியாதை செய்வதாக சமாஜ்வாதி எம்.எல்.ஏ., அபுஆஸ்மி தெரிவித்த கருத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களை மதிப்பவன்:
இது தொடர்பாக அவர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் பெண்களை எப்போதும் அவமரியாதை செய்தது கிடையாது. ஆனால், குறைந்தளவு உடைகளை அணிய அனுமதிக்கும் ஆண்களே அவர்களை அவமதிக்கின்றனர். முறையாக ஆடை அணிய சொல்பவர்களை தான், பாரம்பரிய பழக்கவழக்கங்களை கடுமையாக கடைபிடிக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனக்கூறுவேன். தங்களுக்கு எதிரான குற்றங்கள் குறையாததால், பெண்கள், தங்களது பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறுவேன். தாலி கட்டாமல் இணைந்து வாழ்வதை ஏற்க முடியாது. திருமணத்திற்கு பின்பு தான் ஆண்களுடன், பெண்கள் இணைந்து வாழ வேண்டும் எனக்கூறினார். இவரது இந்த கருத்து மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், புத்தாண்டில் பெங்களூருவில் பெண்கள் மானபங்க படுத்தப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், பெண்கள் நிர்வாணமாக திரிவதை பேசனாக கருதுவதால் தான் பாலியல் சம்பவங்கள் அதிகரிப்பதாக தெரிவித்திருந்தார்.
English summary:
Lucknow: Men are allowed to wear fewer clothes, SP MLA to disrespect them, apuasmi comment that caused a stir again.