புதுடில்லி: தமிழக பிரச்னைகள் தொடர்பாக எங்களை சந்திக்காதது மன உறுத்தலை தருகிறது என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
சந்திப்பிற்கு பின் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது: தமிழர்கள் ஒன்று பட்டுள்ளார்கள் . மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இன்றே ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு திமுக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. பா.ஜ.,வும் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை.
கலாச்சாரம் காக்க வேண்டும்:
மாநிலத்தின் உரிமை தமிழகத்தின் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஜல்லிக்கட்டு உட்பட பல பிரச்னைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். இந்தியாவில் உள்ள அனைத்து கலாசாரத்தையும்பாதுகாக்க வேண்டும். தமிழ் கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும். எங்கள் இயக்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழர் நலனுக்காக பாடுபடும் இயக்கம் அதிமுக., ஜல்லிக்கட்டு விஷயத்தில் வெற்றி கண்டோம்: தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் நடத்த வலியுறுத்தியுள்ளோம். தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் வேறுபாடின்றி தமிழ் உணர்வுக்காக ஒன்றுபட்டு நிற்போம் என காட்டியுள்ளளனர். இதனை மத்திய அரசு உணர வேண்டும்.
அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு உதவி செய்துள்ளது. கடந்த 3 நாட்களாக பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. நாங்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். பிரதமரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள். நானும் பார்லி., துணை சபாநாயகராகவுள்ளேன். அனைவரும் சமம் தான். பல பிரச்சனைகள் குறித்து பேச நாங்கள் காத்திருந்தோம். ஆனால் பிரதமர் எங்களை சந்திக்காதது மன உறுத்தலாக உள்ளது. கச்சத்தீவு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள் தொடர்பாகவும் சந்தித்து பேச விரும்புகிறோம். அவசர சட்டம் கொண்டு வந்ததற்கு மத்திய அரசு உதவி செய்துள்ளது. இதற்கு நன்றி இவ்வாறு தம்பித்துரை கூறினார்.
English summary:
NEW DELHI: Tamil Nadu to meet with us on issues that brings guilt thampidurai Lok Sabha Deputy Speaker said.