புதுடில்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நல்லதே நடக்கும் என முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார்.
நேரம் ஒதுக்கினார்:
முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது: மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும் என கடிதம் மூலமாக பிரதமரை கேட்டிருந்தேன். இதற்காக சந்திக்கவும் நேரம் ஒதுக்க கேட்டிருந்தேன். தமிழகத்தில் இரண்டு பருவமழை மூலம் கிடைக்க வேண்டிய மிகக்குறைந்தளவே நமக்கு கிடைத்தது. இதன் காரணமாக தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது என்பதையும், 32 மாவட்டங்களிலும் 50 சதவீதம் மேற்பட்ட வறட்சி நிலை உள்ளது என்பதையும், வறட்சிநிவாரண நிதியாக அனைத்து நிலைகளிலும் 39 565 கோடி என்ற அளவிற்கு ஒதுக்க வேண்டும் கோரிக்கை மனு ஒன்று தயார் செய்யப்பட்டு, அரசு அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு, பிரதமர் அவர்களுக்கு 3 நாட்களுக்கு முன்பு வருவாய் துறை அதிகாரி டில்லியில், பிரதமர் அலுவலகத்தில் அளித்தார். இதனையடுத்து பிரதமர் காலையில் சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கினார்.
விரைவில் காண்பீர்கள்:
நானும் பிரதமரை சந்தித்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டை பாரம்பரியமான உரிமையை வீர விளையாட்டை மீண்டும் நடத்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினேன். பிரதமர் அவர்களும் ஜல்லிக்கட்டு நடத்திட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தி, அவசர சட்டத்தை கொண்டு வர பிரதமரிடம் தெரிவித்தேன்.
பிரதமர் மிகவும் பரிவுடன் நமது கருத்தை கேட்டார். இந்த பிரச்னையில், தமிழக உணர்வை மிகுந்த மதிப்பளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். தமிழர் உணர்வை முழுமையாக மதிக்கிறேன். இதனை நான் நான்றாக அறிந்துள்ளேன் என பிரதமர் தெரிவித்தார. ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கவில்லை.
மாநில அரசு இது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கையை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு எடுக்கும். மாநில அரசின் நடவடிக்கையை கூடிய விரைவில் நீங்கள் காண்பீர்கள். நன்மையே யாவும் நன்மையே விளையும்.வறட்சி நிலைமை பற்றி பிரதமரிடம் எடுத்து கூறினேன். மாநில அரசுக்கு வறட்சி நிவாரணத்துக்கு உரிய உதவி செய்யப்படும் பிரதமர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் ஜல்லிக்கட்டு தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, நல்லதே நடக்கும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எங்கும் தடியடி நடக்கவில்லை எனவும் கூறினார்.
English summary:
NEW DELHI: Chief Minister jallikattu Paneer Selvam said the case would be fine.