புதுடில்லி: டில்லி சென்ற முதல்வர் பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து போராட்டம் நடத்துகின்றனர்.
3வது நாளாக இன்றும் போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்களின் எழுச்சி காரணமாக முதல்வர் பன்னீர்செல்வம் டில்லி சென்று பிரதமரை சந்தித்து வறட்சிக்கு நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து அவர் நேற்று இரவு அவர் டில்லி கிளம்பி சென்றார். முதல்வருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக அரசின் முதன்மை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனும் உடன் சென்றனர்.
இரவு டில்லியில் உள்ள தமிழக அரசின் இல்லத்தில் தங்கியிருந்த முதல்வர் பன்னீர் செல்வம், லோக் கல்யாண் மார்க்கில் உள்ள வீட்டில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
English summary:
New Delhi: Delhi Chief Minister Paneer Selvam, who met Prime Minister Modi.
The students have been demonstrating across Jallikattu favor. Students are agitating on their own initiative.