சென்னை : ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வந்து போராட்டம், அவசர சட்டம் கொண்டு வரப்பட்டதை அடுத்து பல இடங்களில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சில இடங்களில் போலீசாரால் போராட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இருப்பினும் சென்னை மெரினா, மதுரை, அலங்காநல்லூரில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதால் பதற்றம் நீடித்து வருகிறது. கோவை வ.உ.சி., மைதானத்தில் போராட்டம் நடத்தியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து மைதானத்திற்குள் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினா நோக்கி வந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால், மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டக்காரர்களுடன் மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இருப்பினும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்திற்கு இடையூறு செய்யாமல், சாலையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடருங்கள் என போலீசார் கூறியும், அதனை ஏற்க மாணவர்கள் மறுத்து வருகின்றனர். அலங்காநல்லூரில் வாடிவாசல் முன் அமர்ந்து போராட்டம் நடத்தியவர்கள், தற்போது மீண்டும் ஏற்கனவே போராட்டம் நடத்திய பகுதியில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மதுரை செல்லூர் ரயில் பாலத்தில் 5 நாட்களாக மறிக்கப்பட்டிருந்த ரயிலை, மாணவர்களுடன் பேசி போலீசார் மீட்டனர். ரயில் 50 மீட்டர் நகர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ரயிலில் ஏறி மறியலில் ஈடுபட்டனர். தற்போது போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சேலத்தில் சிறைபிடிக்கப்பட்டிருந்த ரயிலை போலீசார் மீட்டுள்ளனர். காரைக்குடியிலும் ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் பேச்சு வார்த்தை மூலம் கலைக்கப்பட்டனர்.
English summary:
Chennai: Tamil Nadu implemented across jallikattu come to the fight, were brought to the emergency law was withdrawn in many places. In some places, the police evicted the protesters.