புதுடில்லி : 'ஜல்லிக்கட்டு விவகாரம், சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது; இது தொடர்பான வழக்கு, முடிவுக்கு வராமல், இதில், மத்திய அரசால், மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது' என, மத்திய அரசு கூறி உள்ளது.
கலாசாரத்துடன் தொடர்பு:
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, அனில் மாதவ் தவே கூறியதாவது: ஜல்லிக்கட்டு என்பது, நாட்டின் கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய விளையாட்டு. இந்த விவகாரத்தில், மக்களின் உணர்வுகளை முழுவதுமாக மதிக்க வேண்டும்.ஆனால், ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து விவகாரங்களும், தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளன. மக்களின் உணர்வுகளுக்கும், நம்பிக்கைக்கும், சுப்ரீம் கோர்ட் மதிப்பளிக்கும்.
இது தொடர்பான தீர்ப்பை, இன்னும் ஓரிரு நாட்களில், சுப்ரீம் கோர்ட் அளிக்க உள்ளதால், மத்திய அரசும், மிகுந்த நம்பிக்கையில் உள்ளது. கோர்ட் என்ன கூறப்போகிறது என்பதை அறிவதற்காக, அனைவரையும் போலவே, கைகளை கட்டியபடி நானும் காத்திருக்கிறேன்.
கருத்து கூற இயலாது:
இந்தியா, ஜனநாயக நாடு. இங்கு, ஒவ்வொன்றுக்கும் சட்ட திட்டங்கள் உள்ளன; அவற்றுக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும். ஜல்லிக்கட்டு விஷயத்தில், ஆதரவு மற்றும் எதிர்ப்பு என, இருதரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். வன்முறையோ, துன்புறுத்தலோ இல்லையெனில், தங்கள் உரிமைகளுக்காக, எந்த தளத்திலும், யாரும் குரல் எழுப்பலாம்.
தற்போதைய சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு குறித்து கருத்து கூற இயலாது. எதுவாக இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு பின்பே, மத்திய அரசு, தன் முடிவை அறிவிக்க முடியும். இந்த விவகாரத்தில், அவசர சட்டம் குறித்து கூட, எந்த கருத்தும் கூற இயலாது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கு, முடிவுக்கு வராமல், மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
NEW DELHI : 'jallikattu case, the Supreme Court has the; The case did not end, the federal government, can not do anything further that, the federal government is saying.