புதுடில்லி : பட்ஜெட் கூட்டத்தை தள்ளி வைக்குமாறு தோல்வி பயத்தில் எதிர்கட்சி தலைவர்கள் பிதற்றி வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றம் சாட்டினார்.
எதிர்ப்பது ஏன்?
டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: பட்ஜெட் என்பது நாட்டு மக்களை பற்றியும், அவர்களது எதிர்காலத்தை பற்றியுமானது. பட்ஜெட் தாக்கல் செய்வதை எதிர்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? பட்ஜெட் வேண்டாம் என்றால் வளர்ச்சியோ, முன்னேற்றமோ வேண்டாம் என்பதே பொருள். இதைத்தான் அவர்கள் விரும்புகிறீர்களா?
பிதற்றும் எதிர்கட்சிகள்:
மத்தியில் ஆளும், பா.ஜ., அரசுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதால், எதிர்க்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. முதலில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை எதிர்த்த அவர்கள், தற்போது, பட்ஜெட் கூட்டத்தை தள்ளி வைக்க கோருகின்றனர். தோல்வி பயத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பிதற்றி வருகின்றனர். மக்கள் விரோதப்போக்கை அவர்கள் கடைபிடித்தால், இறுதியில் அது அவர்களை நோக்கியே திரும்பும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
NEW DELHI: Budget failed to put away the crowd babble in fear that the opposition leaders accused the Union Minister Venkaiah Naidu.